
PLASTICS: இலங்கையில், நிலைபேறான, மாற்றமடையும் மற்றும் சுழற்சிபொருளாதாரத்தை உள்ளடக்கிய நீண்டகால அணுகுமுறைகளை ஊக்குவித்தல்.

வருடாந்தம் 500,000 தொன் பிளாஸ்டிக் இலங்கையில் இறக்குமதி செய்யப்படுகின்றது. ஒட்டுமொத்தமாக 1.59 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் தவறாக நிர்வகிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் பிளாஸ்டிக் பெறுமதி மற்றும் விநியோகச் சங்கிலியின் (V/SC) நேரியல் எடுத்தல்-உற்பத்தி-அகற்றல் மாதிரி சுழற்சி பொருளாதார அணுகுமுறையின் நன்மைகளைப் பெறுவதை தவறிவிட்டது.
48 மாதங்களுக்கும் மேலாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் PLASTICS திட்டம், மேற்கு மாகாணத்தில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவுகளின் (SMEs) வள செயற்திறன், சுழற்சிப் புத்தாக்கம் பசுமை நிதியியல் மற்றும் நிலைபேறான கழிவு முகாமைத்துவ (SWM) கட்டமைப்புகள் ஊடாக பிளாஸ்டிக் பெறுமதி மற்றும் விநியோக சங்கிலியில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பசுமை வணிக மேம்பாட்டிற்கான, ஒருங்கிணைந்த சூழலை மேம்படுத்துவதற்காக 150 சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவுகள் (SMEs), 10 தொழில்முனைவோர், 50 வணிக மேம்பாட்டு சேவை வழங்குநர்கள், 10 நிதி மற்றும் அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கப்படும். வணிகங்கள், குறிப்பாக பெண்கள் வழிநடத்தும் வணிகங்களின் பெறுமதி சேர்க்கையை ஊக்குவித்து, மொத்த போட்டித் திறன் மற்றும் செலவு வினைத்திறனை மேம்படுத்த ஆதரவு வழங்கப்படும்.
குறிக்கோள்
று மற்றும் நடுத்தர தொழில்முனைவுகளை பசுமையான பெறுமதி மற்றும் விநியோகச் சங்கிலிகளால் ஒருங்கிணைப்பதன் மூலம், இலங்கையில் நிலைபேறான மற்றும் புதுமையான பிளாஸ்டிக் குறைப்புடன் முகாமைத்துவத்தை எளிதாக்கி, பொருளாதார செழிப்பு மற்றும் நிலைபேறான சுற்றுச் சூழலுக்கு பங்களிப்பதே இத் திட்டத்தின் நோக்கமாகும்.
திட்டமிடப்பட்ட வெளியீடுகள்
- பிளாஸ்டிக் V/SC யில் உள்ள SME க்கள் சுழற்சிப் பொருளாதார உத்திகளைப் பின்பற்றுகின்றன.
- பிளாஸ்டிக் V/SC முழுவதும் புதுமையான, சுழற்சிப் பொருளாதார அணுகுமுறைகள் நெறிப்படுத்தப்பட்டுள்ளன.
- பசுமைப் பொருளாதார முயற்சிகளை அதிகரிக்க, குறிப்பாக SME -க்களிடையே நிதி மற்றும் பசுமை முதலீடுகளுக்கான அணுகல் அதிகரிக்கப்படுகிறது.
- பொது-தனியார் உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் கண்காணிப்பு மூலம் பிளாஸ்டிக் நிலைபேறான கழிவு முகாமைத்துவத்திற்கான வழியறிதல், வெளிப்படைத்தன்மை மற்றும் இணக்கம் ஆகியவை வலுப்படுத்தப்படுகின்றன.

