
3ஜீரோ வீடு (3Zero House) என்பது ACTED Sri Lanka அமைப்பின் கற்றல், புதுமை மற்றும் வலுவூட்டல் ஆகியவற்றிற்கான இலங்கையின் மையமாக செயற்பட்டு, பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தின் முகவர்களாக இளைஞர்களை வழிநடத்த வேண்டும் என்ற நம்பிக்கையை வலியுறத்துகின்றது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரச அமைப்புக்கள், சமூக அடிப்படையில் அமைந்த நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவுகள், மற்றும் மிக முக்கியமாக மாற்றங்களை உருவாக்கும் இளையோர்கள் ஆகியோரை ஒன்றிணைப்பதன் மூலம், 3ஜீரோ ஹவுஸ் ஒரு ஒத்துழைப்பு இயக்கத்தை உருவாக்குகிறது. இந்த ஒத்துழைப்பு இயக்கம் பின்வரும் 3 தூண்களால் நிலைப்படுத்தப்பட்டுள்ளது: பூஜ்ஜிய வறுமை, பூஜ்ஜிய விலக்கு, மற்றும் பூஜ்ஜிய கார்பன்.
தற்போது கொழும்பு, வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் வெவ்வேறு வடிவங்களில் அது தனது முன்மாதிரிக் கட்டத்தில் உள்ளது. 3ஜீரோ ஹவுஸ், சமூக மட்டத்தில் தாக்கத்தை உருவாக்குபவரை நெருங்குவதற்கான கருவிகள் மற்றும் அணுகுமுறைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


முதலாவது 3ஜீரோ ஹவுஸ் கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது



மட்டக்களப்பின் வெல்லாவெளி பிரதேச செயலாளர் அலுவலகத்தில் முதலாவது 3ஜீரோ ஹவுஸ் வளாகம் அங்குரார்ப்பணம் செய்யப்படுகிறது



வவுனியாவில் இரண்டாவது 3ஜீரோ ஹவுஸ் அங்குரார்ப்பணம் செய்யப்படுகிறது
ஒரு சுழற்சி பொருளாதாரத்திற்கான தீர்வுகளைத் விருத்தி செய்தல்
பிளாஸ்டிக்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக, பிளாஸ்டிக் பெறுமதிச் சங்கிலியில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்ய, 3ஜீரோ ஹவுஸ் மே 2024 இல் புதுமையான தொழில் முனைவுகளுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது பணிக்கூற்று: மாற்றுப் பொதியிடல், பிளாஸ்டிக் மறு பயன்பாடு மற்றும் 3R (குறைத்தல், மறுபயன்பாடு, மீள் சுழற்சி) அணுகுமுறையை வலுப்படுத்துதல் போன்ற பகுதிகளில் அளவிடக்கூடிய, உள்ளூர் தலைமையிலான தீர்வுகளைக் கண்டறிதல்.



பல்வேறுபட்ட உந்துதலளிக்கும் யோசனைகள் மத்தியில், 8 முன்மாதிரியான வணிகங்கள் 4 மாத கால ஹைபிரிட் இன்கியூபேஷன் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இது RTI International, AOD Design Academy, NIA, LIIN, GLX, Yarl IT போன்ற சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பு நிறுவனங்களுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இது இணைப்பு மற்றும் நிபுணத்துவப் பகிர்வை வளர்க்கிறது. இந்தத் திட்டம், குறித்த வணிகங்களை அவற்றின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு திறன் மேம்பாடு மற்றும் வடிவமைக்கப்பட்ட பயிற்சி மூலம் மேம்படுத்துகிறது.
குழுவைச் சந்தியுங்கள்
- 💡 இந்த வணிகங்கள் எதுவும் நேரடியாக பிளாஸ்டிக் மதிப்பூட்டல் சங்கிலியில் இல்லை – ஆனால் அவை சவால்களை ஆக்கப்பூர்வமாக சமாளிக்கின்றன!
- 💪 அவற்றில் 6 பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள்.
- 🧪 மாற்று பொதியிடலின் 2 திட்டங்கள் முன்மாதிரி நிலையில் உள்ளன.
- 👗 3 திட்டங்கள் ஃபேஷன் தொழிற்துறையில் ஒரு பேண்தகுநிலையான எதிர்காலத்தை உருவாக்குகின்றன.
- 🏗 1 திட்டம் கட்டுமான தொழிற்துறையில் உள்ள பொருட்களை மீள்சிந்தனைக்கு உட்படுத்துகிறது.
- 🛋 1 திட்டம் தளபாடங்கள் மற்றும் விநியோகத் தொழிற்துறையில் புதுமைகளை உருவாக்குகிறது.

கூட்டாளிகளை சந்திக்கவும்
இளம் தொழில்முனைவோருக்கு தொழில்களை மறுவடிவமைத்து நிலையான மாற்றத்தை உருவாக்கும் சக்தி உள்ளது என்பதை இந்த முன்னெடுப்பு நிரூபிக்கிறது.
- அழகாக வடிவமைக்கப்பட்ட கலை ஆபரணங்கள் மூலம், ஒரு நேரத்தில் ஒரு பொருளை வீணாக்குவதைக் குறைக்கும் நோக்கில் ALKE அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டுடியோ, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய PET போத்தல்கள், பொலித்தீன் பைகள் மற்றும் சோடா கேன்கள் போன்ற வீட்டுக் கழிவுகளை தொடர் செயன்முறையாக்கத்துக்கு உட்படுத்துகின்றது. இவை, குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு இடைமறிக்கப்பட்டு, எங்கள் சமூகங்களிலிருந்து நேரடியாக சேகரிக்கப்படுகின்றன.
- Ample என்பது 18-55 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஆடைகளை வழங்கும் பேண்தகுநிலை கொண்ட ஒரு ஃபேஷன் பிராண்டாகும். நவீன ஃபேஷன் உலகில், மிகவும் மலிவு விலையில் மற்றும் தரமான பொருட்களுக்காக, முறையான, சாதாரண மற்றும் களியாட்ட உடைகளின் பிரிவுகளில் பிரத்தியேகமாக தனித்துவமான வடிவமைப்புகள் உள்ளன. குறிப்பாக பிளஸ் சைஸ் தேவைகளையும் உள்ளடக்கியது.
- காலணி தயாரிப்பின் கழிவுகளை உயர்தர, மற்றும் மலிவு விலையில் செருப்புகளாக மீள்சுழற்சி செய்வதன் மூலம், காலணிகளிலிருந்து வெளிவரும் பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கு Solocycle உறுதிபூண்டுள்ளது. இதன் மூலம் வேகமாக மாற்றமடையும் ஃபேஷனால் உருவாகும் பிளாஸ்டிக் மாசுபாட்டை இத்தொழில்முனைவு கையாள்கின்றது.
- Invent of Minds என்பது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மூங்கிலால் செய்யப்பட்ட அலுவலகப் பொருட்களை வழங்குவதில் கவனம் செலுத்தும் ஒரு வணிக நிறுவனமாகும்.
- Star Mushrooms என்பது காளான்களை வளர்ப்பது, கொள்முதல் மற்றும் விநியோகிப்பதில் அர்ப்பணிக்கப்பட்ட முன்னோடி பெண்கள் தலைமையிலான ஒரு குடும்ப வணிகமாகும். தற்போது, காளான்கள் மற்றும் சாண்டஸ்டுகளின் (sandusts) வேர் அமைப்பால் ஆன மைசீலியம் பொதியிடல் குறித்த ஆராய்ச்சியை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
- Teshvo தற்போது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் மெல்லிய படலத்திற்குப் பதிலாக கடற்பாசி மற்றும் தாவர மாச்சத்தால் ஆன உக்கக்கூடிய மெல்லிய படலத்தை உருவாக்கி வருகிறது.
- Shells Ceylon என்பது சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவு உண்பதற்கான கருவிகள் மற்றும் வாஃபிள் கூம்புகளை தயாரிக்கும் நிறுவனமாகும். இது உண்ணக்கூடிய பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஒருமுறை பயன்படுத்தப்படும் மற்றும் பிளாஸ்டிக்கிலான உணவு உண்பதற்கான கருவிகள், கோப்பைகள் மற்றும் கிண்ணங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- AGC Innovate என்பது ‘பிளாஸ்டிக் மாற்றப்பட்ட அஸ்பால்ட் கான்கிரீட் (PMAC)’ ஐ உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனமாகும். இது மீள்சுழற்சி செய்ய முடியாத கழிவு பிளாஸ்டிக்கை (ஷாப்பிங் பைகள், பிஸ்கட் சுற்றிகள் மற்றும் சாக்லேட் சுற்றிகள் போன்றவை பெரும்பாலும் பொது மற்றும் தனியார் துறைகளால் புறக்கணிக்கப்படுகின்றன) சாலைகள், நெடுஞ்சாலைகள், வாகன தரிப்பிடங்கள் மற்றும் முற்றங்களுக்கு அஸ்பால்ட் ஐ நடைபாதையில் பயன்படுத்த தொழில்துறை மூலப்பொருளாக மாற்றுகிறது.
பிளாஸ்டிக் இல்லாத, நிலைபேறான எதிர்காலத்தை நோக்கி நாம் முன்னேறி வரும் நிலையில், மேலும் புதுப்பிப்புகளுக்கு காத்திருங்கள்!
EU ஐரோப்பிய ஒன்றிய இணையதள கட்டுரை
