
இலங்கையில் வர்த்தகங்களுக்கு பசுமை நிதியிடல் சேவைகளை வழங்குதல் பற்றிய மூலோபாய விளக்கவுரை வழங்குதல் நிகழ்வு இலங்கையில் பேண்தகு நிலை மிக்க நிதியிடல் பற்றிய கலந்துரையாடலை முன்னெடுக்க நிபுணர்களை ஒன்றிணைத்த நிகழ்வாகவும் அமைந்தது. உலகளாவிய காலநிலை நெருக்கடியைத் தீர்க்கவும் அத்துடன் ஒரு தாங்குதிறன் மிக்க பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் நிதியியல் முறைமைகளை காலநிலை இலக்குகளுடன் ஒன்றிணைப்பதன் அவசரத் தேவையை இந்த நிகழ்வு கோடிட்டுக் காட்டியது. நிதியியல் இடைவெளிகளை இணைப்பதில் மற்றும் பசுமைப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் நிதியியல் நிறுவனங்களின் வகிபாகத்தை முக்கிய கலந்துரையாடல்கள் சுட்டிக்காட்டின.

திரு டில்ஹான் சீ. பெர்னாண்டோ, இலங்கையில் பல்வகைத்தன்மை (Biodiversity Sri Lanka / BSL) அமைப்பின் தவிசாளர், உலக வெப்பமடைதலை 1.5°C வரை மட்டுப்படுத்துவதற்கான மிகக் குறைந்த வாய்ப்புகள் உள்ளடங்கலாக, COP29 மாநாட்டில் குறிப்பிடப்பட்ட தீவிர காலநிலை அபாயங்கள் பற்றி வலியுறுத்திக் கூறினார். இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் காலநிலைத் தாக்கங்களைத் தடுப்பதற்கு உடனடி நிதியியல் முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார். சுழற்சிப் பொருளாதாரத் தீர்வுகளை முன்னேற்றுவதில், ஐரோப்பிய நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் சுவிட்ச் ஆசியா (Switch Asia) திட்டத்தில் BSL அமைப்பின் ஒத்துழைப்பு ஒரு முக்கிய அம்சம் எனப் பாராட்டப்பட்டது. நாட்டின் பசுமை நிலைமாற்றத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் பசுமை நிதியிடல் சூழலை வளர்த்தெடுப்பதில் மத்திய வங்கி ஆளுநரின் ஈடுபாடு முக்கியமானது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
2050 ஆம் ஆண்டளவில் கால்நிலை நடுநிலையை எட்டுவதை இலக்காகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் பசுமை ஒப்பந்தத்தை (Green Deal) பற்றிய ஆழ்ந்த நோக்குகளை இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் ஒத்துழைப்புக்கான குழுத்தலைவர் கலாநிதி ஜோஹ்ன் எச் ஹெஸ்ஸே பகிர்ந்து கொண்டார். இலங்கையின் முதலாவது பசுமைப் பிணைமுறியின் அங்குரார்ப்பணம் போன்ற மைல்கற்களை பாராட்டிய அவர், தகவல் இடைவெளிகள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தனியார் முதலீட்டுப் பொறிமுறைகள் போன்ற தடைகளை அகற்றுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். சுவிட்ச் ஆசியா திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பிளாஸ்டிக் முகாமைத்துவ முன்னெடுப்பு உள்ளடங்கலாக சுழற்சி பொருளாதார முன்னெடுப்புகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ச்சியாக வழங்கும் ஆதரவுகளையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இலங்கையின் நிதியியல் துறையை வலுப்படுத்துவதில் பங்காண்மைகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.


பிரதம பேச்சாளரான மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, தனது உரையில் காலநிலை அபாயங்களை தீர்ப்பதன் உலகளாவிய முக்கியத்துவம் பற்றி கவனம் செலுத்தியிருந்தார். வரியிறுப்பாளர்களின் நிதி மூலம் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தனியார் துறை முதலீடுகளைக் கவர்வதற்கு புத்தாக்கம் மிக்க நிதியியல் உபகரணங்களின் தேவையையும் எடுத்துரைத்தார். பேண்தகு நிலை கொண்ட நிதியிடல் தொடர்பில் 2019 வழிவரைபடம் மற்றும் 2022 இன் பசுமை நிதி வகைப்படுத்தல் போன்ற இலங்கை மத்திய வங்கி அடைந்த முன்னேற்றங்களையும் அவர் கோடிட்டுக் காட்டினார். தொற்றுநோய் ஏற்படுத்திய சவால்களுக்கு மத்தியிலும், பயிற்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகள் மூலம் நிதித்துறையின் இயலுமை விருத்திக்கு மத்திய வங்கி பணியை முன்னெடுத்தது. பேண்தகு நிலை மிக்க நிதியியல் சட்டகவடிவங்களை மேலும் பரந்ததாக ஆக்குவதற்கு சமூக மற்று சூழல் பரிசீலனைகளை உள்வாங்கும் வகையில் ஒரு புதிய வழிவரைபடம் தயாரிக்கப்பட்டு வருகிறது. வளர்ந்து காலநிலை அபாயங்கள நிவர்த்தி செய்வதற்கு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் ஏற்றவகையில் மாற்றி அமைப்பதற்கான நிதியிடலின் முக்கியத்துவத்தையும் கலாநிதி வீரசிங்க வலியுறுத்தினார். இலங்கையின் பேண்தகுநிலை மிக்க நிதியியல் முன்னேற்றத்தில் காணப்படும் இடைவெளிகளை அகற்றுவதற்கு புத்தாக்கம் மிக்க நிதியியல் உற்பத்திகளின் உருவாக்கத்துக்கான கோரிக்கையை அவர் முன்வைத்தார். பேண்தகுநிலையை வளர்த்தெடுத்தல் மற்றும் மற்றும் பசுமை அபிவிருத்தியை நோக்கிய கலாச்சார மாற்றத்தை உருவாக்குவதில் மத்தியின் வங்கியின் கடப்பாட்டை ஆளுநர் மீளுறுதி செய்தார்.
பசுமை நிதியிடல் மற்றும் தூய்மையான தொழில்நுட்ப தீர்வுகள் மூலம் ஒரு சுழற்சிப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் சுவிட்ச் ஆசியா திட்டம் பற்றி BSL அமைப்பின் பசுமை நிதியியல் நிபுணர் திரு எர்ரோல் அபேரத்னவின் அளிக்கை ஒன்றும் நிகழ்வில் உள்ளடங்கியிருந்தது. சாத்தியத்தன்மை பற்றிய ஆய்வுகள், நிதியியல் அமைப்புகளை வெளிச்சென்றடைதல், அத்துடன் SME களுக்கான இயலுமை விருத்தி பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் என்பன இத்திட்டம் அடைந்த முக்கிய வெற்றிகளுள் அடங்குகின்றன. அமைப்பு ரீதியான ஈடுபாட்டை அதிகரித்தல் மற்றும் காலநிலை ஆபத்து நிதியிடலுக்கு கொடை வழங்குனர்களின் முதலீட்டு உந்து சக்தியை வழங்குதல் என்பவற்றில் இத்திட்டத்தின் எதிர்கால முன்னெடுப்புகள் கவனம் செலுத்தவுள்ளன.


இறுதியாக, பசுமை முதிர்ச்சி மதிப்பீட்டில் கண்டறியப்பட்ட விடயங்களை ஒரு ஸ்மார்ட் எதிர்காலத்துக்கான நிலையத்தின் (Centrer for a Smart Future) அமைப்பின் இணை ஸ்தாபகர் திரு அனுஷ்க விஜேசிங்க அளிக்கை செய்தார். குறித்த மதிப்பீடு, மட்டுப்படுத்தப்பட்ட உள்ளகக் கொள்கைகள் மற்றும் அபாய நேரிடர் மதிப்பீட்டு பொறிமுறைகளின் பற்றாக்குறை போன்ற இடைவெளிகள் பசுமை நிதியியலை இயக்கநிலைக்கு கொண்டு வருவதில் தடைகளாகக் காணப்படுவதை அடையாளம் கண்டது. பசுமை வளர்ச்சிக்கான வாய்புகளைத் திறப்பதற்கு,
சூழல் அபாய மதிப்பீடுகளை நிதியியல் தொடர்செயன்முறைகளில் இணைப்பதன் அவசியத்தை இந்த மதிப்பீடு வலியுறுத்தியுள்ளது.
திறந்த கலந்துரையாடலின் போது, பசுமை நிதியியலில் இணைந்துள்ள அதிக செலவு, பசுமை பிணைமுறிகளின் இயலுமை, மற்றும் பிஸ்கால் கொள்கைகள் மற்றும் கட்டுப்படுத்தும் அமைப்புகளால் வழங்க முடியுமான ஊக்குவிப்புகள் போன்ற விடயங்களை பங்குதாரர்கள் எடுத்துரைத்தனர். தேசிய கொள்கைகளை சர்வதேச காலநிலை இலக்குகளுடன் ஒன்றித்தல் மற்றும் புத்தாக்கம் மிக்க பொறிமுறைகளை வளர்ப்பதிலும் அமைப்பு ரீதியான ஒருங்கிணைப்பை கலாநிதி வீரசிங்க சுட்டிக்காட்டினார்.
தடைகளை அகற்றுவதற்கும், பசுமை நிதியியலை முன்கொண்டு செல்வதற்கும், அத்துடன் ஒரு பேண்தகுநிலை மிக்கதானதாக இலங்கையின் பொருளாதரம் நிலைமாற்றம் அடைவதை துரிதப்படுத்துவதற்கும் ஒரு பல் பங்குதாரர் ஒத்துழைப்புக்கான அழைப்புடன் விளக்கவுரை வழங்கல் நிகழ்வு நிறைவடைந்தது. உரையாடலை வளர்த்தெடுப்பதன் மூலம் சூழற் தொகுதி மீளமைப்பு, பசுமை பொருளாதார வளர்ச்சி, மற்றும் காலநிலை சவால்களுக்கான தாங்குதிறன் உருவாக்கம் என்பவற்றை பங்குதாரர்களால் முன்னெடுக்க முடியும்.
