
புவிக்கோளத்தை பாதுகாப்பது பணத்தைப் பாதுகாக்கும் என்றால் என்ன நடக்கும்? இன்றைய போட்டிச் சந்தையில், பசுமை நிலைமாற்றத்தை அடைவது கோளத்துக்கு மட்டும் நன்மை பயக்கக் கூடியது மட்டுமல்ல – உங்கள் கம்பனியின் அடித்தளத்துக்கும் சிறந்தது. பாரிய வர்த்தக அமைப்புகள் மில்லியன் கணக்கான பணத்தை சூழல் சான்றிதழ்களுக்காக செலவிடும் அதேவேளை, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவுகள் ISO 14001 போன்ற முறைமைகளை அமுல்படுத்துவதில் உள்ள செலவுகள் மற்றும் அவற்றின் சிக்கல்தன்மைகளுடன் போராடி வருகின்றன. எனினும், உங்கள் இயக்கத்துக்கான செலவுகளைக் குறைத்து, மேலும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்தவாறு சூழலுக்கு ஏற்படும் தாக்கங்களைக் குறைக்க எளிமையான மற்றும் செலவு குறைந்த ஒரு வழை உள்ளது எனக் கூறினால் எவ்வாறிருக்கும்? இந்த இடத்தில் தான் சூழல் முகாமைத்துவ முறைமைகள் செயற்படுகின்றன, அது எந்த அளவிலும் காணப்படும் வர்த்தகங்களுக்கும் செயற்படும் வகையில் அமைந்த பேண்தகு நிலைக்கான நடைமுறை சாத்தியமான வழியை வழங்குகிறது.

சூழல் முகாமைத்துவ முறைமையின் (EMS) நன்மைகள்
சூழல் அபாய அம்சங்களை அடையாளம் காணல்:அபாயம் இணைந்துள்ள அம்சங்கள், கழிவுகள், முன்னேற்றப்பட வேண்டிய அம்சங்கள் என்பவற்றை அடையாளம் காண வர்த்தகங்கள் ஒரு கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையைப் பின்பற்றுவதை ISO 14001 போன்ற EMS சான்றிதழ்கள் உறுதி செய்கின்றன. அது வர்த்தகங்கள் வளப் பயன்பாடு, வெளியேற்றங்கள் மற்றும் கழிவு உருவாக்கம் என்பவற்றை வர்த்தகங்கள் மேற்கொள்வதை இயலுமாக்குகின்றது. புவிக் கோளத்தில் ஏற்படும் எதிர்மறையான தாக்கங்களை குறைப்பதற்கு மேலதிகமாக, இந்த நடவடிக்கைகள் சூழல் உணர்வு மிக்க நிறுவனங்கள் என்ற பிரதி விம்பத்தை அவ்வர்த்தகங்கள் கட்டியெழுப்பவும் குறித்த சான்றிதழ்கள் உதவுகின்றன.
செலவு சேமிப்பு மற்றும் வினைத்திறன்: கழிவுகளைக் குறைக்கும் அத்துடன் எரிபொருள் மற்றும் நீர் போன்ற வளங்களின் உவப்பான பயன்பாட்டை நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலம், பயன்பாட்டுக்கான செலவுக் குறைப்பு, மூலப்பொருட்களின் குறைந்த பயன்பாடு, மற்றும் கழிவு அகற்றல் செலவு குறைப்பு போன்றவற்றை அடையும் வகையில் வர்த்தகங்களின் செயற்பாடுகளை ஒருமுகப்படுத்துவதற்கு EMS வழிவகுக்கின்றது. மேலதிகமாக, சூழல் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி நடக்கும் தன்மையை EMS வளர்க்கிறது, பின்பற்றாமல் இருப்பதற்கு விதிக்கப்படும் பாரிய தண்டப்பணங்களில் இருந்து வர்த்தகங்கள் பாதுகாப்புப் பெறுவதற்கு இது வழி வகுக்கின்றது.மேம்படுத்தப்பட்ட சந்தை போட்டித்திறன்: நுகர்வோர் மற்றும் முதலீட்டாளர்கள் பேண்தகுநிலைக்கு முன்னுரிமையளிப்பது அதிகரித்து வரும் நிலையில், நன்கு நிலைப்படுத்தப்பட்ட ஒரு EMS, சூழல் பொறுப்பாண்மை மீதான செயற்பாடு மிக்க முன்னேற்றத்துக்கு கம்பனி கொண்டுள்ள கடப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றது. இது சூழல் உணர்வு கொண்ட நுகர்வோர் மற்றும் முதலீட்டாளர்கள் வர்த்தகத்தின் பால் ஈர்க்கப்படுவதை அதிகரிக்கும். இது வர்த்தகத்துக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதுடன் சந்தையில் அதன் நிலையை வலுப்படுத்தவும் உதவுகின்றது.

ISO 14001 ஐப் கைக்கொள்வதில் காணப்படும் சவால்கள்
உயர் ஆரம்ப செலவுகள் மற்றும் வளத் தேவைகள்: முறைமையை ஆரம்பிப்பதுடன் தொடர்புடைய செலவுகள் ஒரு குறிப்பிடத்தக்க தடையாக அமைய முடியும், குறிப்பாக இது சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முனைவுகளுக்கு (SMEs) பாரிய தடையாக அமைகின்றன. ஒரு EMS ஐ உருவாக்குவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் குறிப்பிடத்தக்க நேரம், நிபுணத்துவம் மற்றும் முயற்சி தேவைப்படலாம். மூன்றாம் தரப்பு சான்றழிப்புகளுக்கான செலவுகளும் குறிப்பிடத்தக்கதாக அமைய முடியும், பல வர்த்தகங்கள் இச்செலவுகளுக்கான நியாயப்படுத்தல்களை வழங்க சிரமப்படுகின்றன, விசேடமாக ஒரு EMS இல் மேற்கொள்ளப்படும் முதலீட்டின் அடைவுகள் வெளிப்படையானவை அல்ல என்பதால் இந்நிலை தோன்றுகின்றது.
தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு:தொடர்ச்சியான கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்கான தேவை நேரம் மற்றும் வளங்கள் இரண்டின் அடிப்படையில் தேவைப்படலாம். பல SME கள், இதனை பெறுமதி சேர்க்கும் நடவடிக்கைகளின் ஒரு தொகுதியாக அல்லாமல் ஒரு தடையாகவே நோக்குகின்றன.
ISO 14001 குறைந்த அளவில் கைக்கொள்ளப்படுவது ஏன்?f ISO 14001 Certification?
ISO 14001 இன் தெளிவான சாத்தியமான நன்மைகள் இருந்தபோதிலும், அதன் அமுல்படுத்தலுடன் இணைந்துள்ள சவால்கள் சார்பளவில் அது குறைவாக கைக்கொள்ளப்படுவதற்கு, விசேடமாக SME கள் மத்தியில் குறைவாக எடுத்துக்கொள்ளப்படுவதற்கு பங்களிக்கும் காரணியாக அமைகின்றது. ஆரம்பச் செலவு, சிக்கல்தன்மை, மற்றும் ஒரு வினைத்திறன் மிக்க EMS தரநிலையை உருவாக்குவதற்கு மற்றும் பேணுவதற்கு எடுக்கும் காலம் காரணமாக பல வர்த்தகங்கள் அதனைக் கைக்கொள்வதற்கு தயங்குகின்றன.
ISO 14001 குறிப்பிடத்தக்க சூழல், நிதியியல் மற்றும் போட்டித்தன்மை நன்மைகளை வழங்கும் அதே வேளை, அதனை கைக்கொள்வதில் இணைந்துள்ள சவால்கள் – குறிப்பாக சிறிய வர்த்தகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகமாகவுள்ளன.
தீர்வு
இச்சவால்களைக் கருத்திற் கொண்டு, ISO 14001 நியமத்தின் சில முக்கிய அம்சங்களுக்கு இணங்கியதாக, SME களுக்கு ஆதரவளிக்க STENUM Asia அமைப்பினால் QEMS உருவாக்கப்பட்டுள்ளது, இது உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தியவாறு இயக்கத்தின் செய்றபாட்டை மேம்படுத்தும்.
QEMS என்பது SMEகளுக்காக வடிவமைக்கப்பட்ட எளிமைப்படுத்தப்பட்ட, விரைவான ஆனால் பயனுள்ள சுற்றுச்சூழல் முகாமைத்துவ முறைமையாகும். இதில் ISO 14001 இன் குறிப்பிட்ட அம்சங்கள் மற்றும் தேவைப்பாடுகள் கருத்திற்கொள்ளப்படுவதால் ISO 14001 இனை நோக்கிய பயணத்தின் ஒரு எளிமையான மற்றும் முகாமைத்துவம் செய்யக்கூடிய முதலாவது படிநிலையாக QEMS கருதப்படுகிறது. SME களுக்கு பெறுமதி சேர்க்கக் கூடிய ஒரு EMS இன் முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும் அதேவேளை, SME களுக்கு ஏற்படும் சூழல் தாக்கங்களைக் குறைக்கவும் உதவுகின்றது.
SMEகளுக்கான QEMS ஐ செயல்படுத்துவது ஒரு கட்டமைக்கப்பட்ட 8-படிநிலைகள் கொண்ட செயல்முறையாகும், இது 4 நாட்களில் முடிக்கப்படலாம். SME இன் வர்த்தக சூழமைவைப் புரிந்து கொள்ளல் மற்றும் சூழல் முகாமைத்துவ முறைமையின் பரப்பு எல்லையை வரையறை செய்தல் என்பவற்றுடன் இப்பயணம் ஆரம்பமாகின்றது. அதன் பின்னர், முக்கிய அம்சங்களை அடையாளம் காண சூழல்-வரைபடமாக்கல் மதிப்பீட்டை மேற்கொள்ளல்; அத்துடன் ஏற்ற வகையில் அமைந்த சூழல் செயற்பாட்டுத் திட்டத்தை தயாரித்தல் என்பன அடுத்தடுத்த படிநிலைகளாக அமைகின்றன. எமது வழிகாட்டலுடன் SME கள் ஒரு ஒரு சூழல் கொள்கையை உருவாக்கும் அத்துடன் முன்னேற்றத்தை மதிப்பிட முதலாவது முகாமைத்துவ மீளாய்வை நடத்தும். மீளாய்வின் அடிபப்டையில் தேவையான மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். இணக்கத்தை உறுதிப்படுத்த ஒரு உள்ளக மீளாய்வு மேற்கொள்ளப்படும், அதன் பின்னர் சான்றழிப்பதற்கான பொருத்தப்பாட்டை மதிப்பிட இரண்டாவது முகாமைத்துவ மீளாய்வு நடத்தப்படும்.
தொடர் செயன்முறை முழுவதும், ஆலோசனைகள் மற்றும் ஆவணங்கள் ஊடாக SME கள் வழிநடத்தப்படும், இறுதியாக அவை நீண்ட கால நிலைபேற்றுத்தன்மையை அடையவும் ISO 14001 சான்றிதழை பெறும் சாத்தியத்தை அடையவுமான அடித்தளத்தை அவை பெற்றுக்கொள்ளும்.
QEMS தற்போது இலங்கையில் நான்கு SME களில் செயல்படுத்தப்படுகிறது மற்றும் ஏற்கனவே இந்தியாவில் வேறு சிலவற்றில் நிறுவப்பட்டுள்ளது, அங்கு அவை ஏற்கனவே குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கியுள்ளன
சுற்றுச்சூழல் பொறுப்புக்கான பாதை சிக்கலானதாகவோ அல்லது விலை உயர்ந்ததாகவோ இருக்க வேண்டியதில்லை. SME களின் பேண்தகு நிலைக்கான பயணத்தின் முதலாவது நடைமுறைப் படிநிலையை QEMS வழங்குகின்றது, குறைவடைந்த சேவகள் கட்டணம் மற்றும் உயர்வடையும் சந்தை நற்பெயர் என்பவற்றின் மூலம் அதன் நன்மைகள் விநியோகிக்கப்படுகின்றன. ஒரு வருடத்திற்குள் முதலீட்டின் மீதான நன்மைகளைக் (ROI) காட்டும் வெற்றிக் கதைகள் மற்றும் 30% வரை செயல்பாட்டு செலவு குறைப்புகளுடன், சுற்றுச்சூழல் மேலாண்மை முறையை செயல்படுத்தலாமா என்பது கேள்விக்குரிய விடயம் அல்ல – ஏன் காத்திருக்க வேண்டும்? உங்கள் வர்த்தகத்துக்கான மிகவும் நிலைபேறான மற்றும் இலாபகரமான எதிர்காலத்தை நோக்கி இன்றே முதல் அடியை எடுத்து வையுங்கள்.
